திராமுகிப் டாக்டே போன்றவைகளோடு
ஒரு தட்டலில் சுருண்டு
அடுத்த நொடி நம் பெயரன்
முன் நின்று வறுக்கிறான்
ஆல்பதீஸா அழகியுடன்
நயமான கடலைகளை...
டிகக்ர்வாய்ஸை திருதிருவென
திருக்கிய ஒரு பேத்தி அப்பாவின்
குரலுக்கு அதிர்வெண் கோர்த்து
காற்றிலிருந்து உறிஞ்சுகிறாள்
என்னை திட்டிய வசனங்களை..
கைகள் வலிப்பதாய் சொன்னாயே
டாக்டே முன் காட்டி அது கொட்டும்
மாத்திரைகளை விழுங்கிவிடு
வேறு வழியில்லை..
திராமுகிப்பை கசக்கி பல்லிடுக்கில்
வைத்துக்கொண்டு எண்களை நினைக்க
கசோரா கோளில் வாழும் பக்கத்து வீட்டு
வேரம்தா குழந்தையை தொட்டு பேசலாமாம்.
சீக்கிரம் வாங்க வேண்டும்....
எல்லாம் கிடக்கட்டும் தாமிரா
அந்தக் காலத்தில் நாம்
மூன்றாம் தலைமுறை இணைய வேகத்தில்
செய்தியனுப்பிவிட்டு
பதிலுக்காக காத்திருந்த சில நொடி
அவஸ்தைகள் இப்போது நினைத்தால்
நெஞ்செல்லாம் சுகமே..
--கனா காண்பவன்