வளைவில் முந்தாதே

எனை நீ முந்த!
உனை நான் முந்த!
நமை அந்த இராட்சச வண்டி முந்தியதே!!
இரத்தமும் சதையுமாக!
நான் ஆரத் தழுவிக்கொள்ளும்!
என் உயிரும் உடலுமான
உனை! மீண்டும்
சந்திக்காத இடத்திற்கு
வழியனுப்பியதோ!
எமனுக்கு என்மேல்...
என்ன கோபம்!
எனை அவரிடமிருந்து
பிரிக்க!-----!
காலதேவனுக்குத் தான்!
என்மேல்...
என்ன கரிசனம்!
எனை விட்டிருந்தால்
அவர் கைகோர்த்து
சென்றிருப்பேனே!!
அதே வண்டியை
மீண்டும் வரச்சொல்
எமதர்மா!
எனை அவரோடு சேர்த்து வைக்கட்டும்..
இல்லையென்றால்
நீ எமதர்மனே அல்ல
வெறும் எமன்!
எமனோ!
காலதேவனோ!
எவனும்
என்னிடமிருந்து
அவரை
பிரிக்க முடியாது!
அவரின்
உயிர் மின்சாரம்
நின்றதென்றால்
என் இதய பொத்தானும்
நிறுத்தப்பட்டது என்று தான் அர்த்தம்......