ஏகபாத அந்தாதி-6

குடிநீர் படைத்தது கூடலி னாடலோ
குடிநீர் படைத்தது கூடலி னாடலோ
குடிநீர் படைத்தது கூடலி னாடலோ
குடிநீர் படைத்தது கூடலி னாடலோ

குடிநீராம்(வையை நதியை) படைத்தது
கூடலின் ஆடலோ, கூடல் நகராம் மதுரையில் நடத்திய திருவிளையாடலோ

குடிநீராம் (குற்றால அருவியை) படைத்தது
கூடலின் ஆடலோ,கூடல் மலையாம் திரிகூடமலையாம் குற்றாலத்தில் நடத்திய திருவிளையாடலோ

குற்றாலத்தில் குடிநீர் நிவேதனம் படைத்தது
கூடலின் நாடலோ,கூடல் மலையாம் திரிகூடமலையாம் குற்றாலத்தில் வேண்டலோ

குடி,நீர் படைத்தது அதாவது குடி மக்களை நீர் படைத்தது
கூடலின் நாடலோ,மக்களின் கூடும் ஆசையினாலோ…

எழுதியவர் : சு.ஐயப்பன் (25-Jul-15, 4:50 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 97

மேலே