ஊர்மிளா எங்களப் பார்மிளா

ஊர்மிளா எங்களப் பார்மிளா
ஏம்ப்பா எனக்கு ஊர்மிளா-ன்னு பேரு வச்சீங்க? அதுக்கென்ன அர்த்தம்?
ஒரு சினிமாவிலெ வர்ற கதாநாயகி பேரு ஊர்மிளா. ஒங்க அம்மாவுக்கு அந்தப் பேரு பிடிச்சுப் போச்சு. அந்தப் பேர அடம்பிடிச்சு உனக்கு வச்சது உங்கம்மா தான். எங்களுக்கு அந்தப் பேரோட அர்த்தம் எல்லாம் தெரியாது.
சரி உனக்கு இப்ப என்ன ஆச்சு. உம் பேருக்கு ஏ அர்த்தம் கேக்கற?
இல்லப்பா நம்ம பகுதிலெ இருக்கற சில குறும்பக்காரப் பசங்க, ஊர்மிளா, நீ யார்மிளா? எங்களப் பார்மிளா-ன்னு கிண்டல் பண்ணிப் பாட்டுப் பாடறாங்க அப்பா.
ஓஹோ, போலீஸ்காரன் பொண்ணயே கலாட்டப் பண்ணறானுகளா பொறுக்கிப் பசங்க. நீ நாளைக்கு அவனுகள அடையாளம் காட்டு முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கறேன்.
Urmila : Meaning
The meaning of Urmila is “Waves of passion” நன்றி: கூகுல்