கர்ளா
என்னய்யா ஒம் பொண்ணுக்கு கர்ளா-ன்னு பேரு வச்சிருக்க?
என்னங்க செய்யறது. உலகத்தோட ஒத்துப்போக வேணடியிருக்குதே. இப்பெல்லாம் நம்ம தமிழ் மக்கள் இந்திப்பேரத் தம் பிள்ளைங்களுக்கு வைக்கற மோகத்திலே இருக்காங்க. பக்கத்து வீட்டுக்காரர் அவுங்க பொண்ணுக்கு சர்ளா-ன்னு பேரு வச்சிருக்காரு. எம் பொண்ணுக்கு நாங் கர்ளா-ன்னு பேரு வச்சிருக்கேன்.
சரி. அந்த ரண்டு பேருக்கும் அர்த்தம் என்னன்னு தெரியுமா?
அதப்பத்தியெல்லாம் யாருங்க கவலப்படறாங்க?
சரி. நான் சொல்லறென் நல்லாக் கேட்டுக்கய்யா. சர்ளா -ங்கற இந்திப் பேரத் தமிழ்ல சரளா-ன்னு மொதலெல்லாம் சொல்லுவாங்க. அதுக்கு 'நேர்மையானவள்'ன்னு அர்த்தம். கர்ளா-ங்கறது இநதிச் சொல் இல்ல. பல ஐரோப்பிய மொழிகளில் வெவ்வேற அர்த்தங்கள் அந்தப் பேருக்கு இருக்கு. உ-ம்: ஒரு அர்த்தம் மட்டும் சொல்லறேன். கேட்டுக்கய்யா . கர்ளா-ன்னா செல்வசசெழிப்புடன் உடல் நலம்,, ஆன்மீகம் ஆகியவற்றில் உச்சநிலையுடன் சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவர்- ன்னு அர்த்தம்.
பரவாயில்லையே நாங் குருட்டுத்தனமா எம் பொண்ணுக்கு நா வச்ச பேருக்குப் பல அர்த்தங்களா? வியப்பா இருக்குதுங்க.