என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 13 ​

சென்ற பகுதியில் எழுதிய என் கல்லூரி அனுபவங்களும் , நினைவுச் சாரல்களும் , மனதை கிளறிவிட்டன ...வாழ்க்கை பின்னோக்கி பயணம் செய்திட வைத்து விட்டது ... இது மிகையல்ல ...மின்னல் கீற்றுக்களாய் நெஞ்சில் எழுந்தன பலபல ....என்ன இருந்தாலும் திரும்பவும் கிடைக்காதது இளமைப்பருவமும் , கல்லூரிக் காலமும்தானே ...

நான் கல்லூரி strike என்றாலோ .. கட் அடிக்க நாங்கள் நண்பர்கள் வெளியில் வந்தாலோ , உடனே விடுதிக்கு ( Hostel ) சென்று விடுவோம் . அங்கு சென்றுதான் முடிவே எடுப்போம் அடுத்து என்ன செய்யலாம் என்று. நண்பர்கள் நடராஜன் , முரளிதரன் அவர்களின் அறையில்தான் என்றுமே முடங்குவோம் ( முரளிதரன் இறந்துவிட்டார் கடலூரில் , சில ஆண்டுகளுக்கு முன்னால் ) ....சிலர் சீட்டு விளையாடுவர் ..சிலர் சினிமாக்கு கிளம்புவர் ...நான் அங்கேயே சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு தூங்குவேன் .. இல்லையெனில் வீட்டிற்கு வந்துவிடுவேன் ...எனக்கு தெரிந்தது இன்றுவரை இதுதான் ...ம்ம்ம் . SHOLAY படம் முதல் நாள் முதல் காட்சி block ல் டிக்கெட் எடுத்து , நாங்கள் 15பேர் சத்யம் திரை அரங்கில் பார்த்தது மறக்கவே முடியாது.

சிறுவயதில் இருந்தே அதிகம் ஹோட்டலில் சாப்பிடுவதையே விரும்புபவன் ....இன்றும் அதுவே தொடர்கிறது என்பது உண்மை ....நான் சைவம் என்பதால் , உடுப்பி ஹோட்டல்தான் அதிகம் செல்வேன் ....கடந்த ஒரு வருடமாகத்தான் ஆம்லட் சாப்பிட ஆர்மபித்தேன் ....அடிக்கடி அல்ல ...அதுவும் சிலரின் வற்புறுத்தலின் பேரில் ...வேறு எதுவும் பிடிக்கவில்லை .. காரணம் வேறு இல்லை ....இப்போதெல்லாம் அசைவ உணவகம் சென்றும் , அங்கு சைவ உணவு சாப்பிடுகிறேன் .. பழகிவிட்டது .

என்னுடன் பள்ளியில் படித்த Dr .ராஜசேகர் என்பவர்தான் இன்று திரைப்படங்களில் ( தெலுங்கில் அதிகம் ) நடிக்கிறார்...அவரின் அப்பா காவல் துறையில் துணை கமிஷனராக இருந்தவர். அதுவும் இப்பக் காணவில்லை. மற்றொரு ராஜசேகர் .....கல்லூரி நண்பர் ... மிகவும் உயரமாக இருப்பார் ....பத்ரகாளி என்ற படத்தில் முதலில் வில்லனாக நடித்தவர் .தற்போது TV சீரியல்களில் நடித்து வருகிறார். என்னுடன் பணிபுரிந்த நண்பர் காசி விஸ்வநாதன் என்பவர் கோபி என்ற பெயரில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை வேடத்திலும் , குணசித்திர வேடத்திலும் . அடிக்கடி இன்றும் சின்னத்திரையிலும் வருகிறார்.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது , திரு மொராஜி தேசாய் அவர்கள் பிரதமர் . மாணவர்களுக்காக ஒரு சிறப்பு சலுகை கட்டணத்தில் வெளிநாடு சென்றிட அறிவித்த திட்டத்தில்தான் நாங்கள் சுமார் 42 பேர் ( மற்ற கல்லூரிகளிலும் சேர்த்து ) வெளிநாட்டுப் பயணம் சென்றோம். கட்டணம் சென்று வர மொத்தம் 5000 ரூபாய் மட்டுமே. .... சென்னை - டெல்லி - பாங்காக் - ஹாங்காங் - மலேசியா . சிங்கப்பூர் - சென்னை . மொத்தம் 15 நாட்கள் ....நாங்கள் 1978 ஜனவரி 1 ம் தேதி புது வருடத்தை நடுஇரவில் , ஹாங்காங்கில் கொண்டாடியது இன்னும் நினைவில் உள்ளது . அந்த இரவில் அந்த நகரமே மின்விளக்குகளால் ஜொலித்த காட்சி அப்படியே நினைவில் நிற்கிறது .
இதில் என்ன வேடிக்கை தெரியுமா .. எங்கள் குழுவில் 41 பேர் மாணவர்கள் ( வெவ்வேறு கல்லூரி ) , ஒரே ஒரு மாணவி ( SIET கல்லூரி ) மட்டும் வந்திருந்தார்.

ஆனால் இன்று எந்த சக மாணவரிடமும் நெருக்கம் இல்லை .. ஓரிரு நண்பர்களைத் தவிர .....காரணம் நான் எங்கும் செல்வதும் இல்லை .... பார்ப்பதும் இல்லை . தனிமையே பழகிவிட்டது . அது சரியா தவறா என்றும் தெரியவில்லை ....

கல்லூரி கல்வி முடித்தவுடன் மேலே படிக்கலாம் என்றுதான் நினைத்தேன் ....ஆனால் அதில் அதிகம் நாட்டம் செலுத்தவில்லை ....அன்று இருந்த மனநிலையே காரணம் . அப்போது எல்லாம் வங்கியில் வேலை செய்வது என்பது சமூகத்தில் ஒரு அந்தஸ்தாக கருதப்பட்ட காலம் . நானும் இரண்டு வங்கியில் முயற்சித்தேன் ... ஒரு தனியார் வங்கியில் ஆறு மாத காலம் , கதீட்ரல் சாலையில் , சோழா ஹோட்டல் எதிரில் பணி புரிந்தேன் ....ஆனால் வேலை confirm ஆகவில்லை .. ஆனால் அங்கு இருந்தபோதுதான் முதன் முதலில் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் , திரு ரஜினி காந்த் அவர்களை நேரில் பார்த்தேன் . அவருக்கு அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார். சாதரணமாக பேசுவார் . பலமுறை வந்துள்ளார் . பீடா சாப்பிட்டுக்கொண்டே வருவார். மிக எளிமையாக பழகுவார்.....அன்று ஓரளவே பிரபலம் . அவர் நெருங்கிய நண்பர்கள் , தனி காரியதரிசி ( PA ) எனக்கு நல்ல பழக்கம் அப்போது ....திரு கிருஷ்ணா ராவ் , திரு முரளி ராவ் அவர்கள் தான் மிக முக்கியமானவர்கள் . நான் அவர்களுடன் ஒன்றாக மங்களூர் வரை சென்று வந்துள்ளேன் .

அதன்பிறகு பல்லாவரத்தில் உள்ள , ENGLISH ELECTRICALS ல் சேர்ந்தேன் .. அங்கு என்னை நடத்திய விதமும் , சூழலும் பிடிக்கவில்லை என்பதால் ஒரே வாரத்தில் விலகி விட்டேன் . எனது தாத்தா அவர்கள் ஒருநாள் என்னை கோபமுடன் , நீ வேறு எங்கும் வேலைக்கு செல்ல வேண்டாம் .. நான் உள்ள பெனிபிட் பண்டிலேயே இரு என்று கட்டளையிட்டு , உடனே அங்கு சென்று உட்காரவும் சொல்லிவிட்டார் . அரைமனதுடன் அங்கு சேர்ந்தேன் ...அங்கு 5 வருடம் இருந்தேன் ... இருந்தாலும் வங்கியில் ஏதாவது ஒன்றில் சேர வேண்டும் என்றே உள்ளம் அலைபாய்ந்தது ... இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது . பேராசிரியர் K அன்பழகன் , மற்றும் பல நீதிபதிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அந்த விழாவில் பலரும் எண்களின் தாத்தாவின் அயரா உழைப்பையும் நேர்மையையும் பாராட்டி பேசினார்கள் . அவருடைய முழு உருவப்படத்தை பேராசிரியர் அன்பழகன் அவர்கள்தான் திறந்து வைத்தார். தாத்தாவும் மேடையில் அமர்ந்து இருந்தது ஒரு சிறப்பு . ....

அங்கு உள்ளபோது எனது உறவினர் ஒருவரின் தூண்டுதலால் , உதவியால் தனியார் வங்கி ஒன்றில் சேர்வதற்கு வாய்ப்பும் வந்தது. 1983ம் வருடம் , மே மாதம் 16ம் நாள் அந்த வங்கியில் சேர்ந்தேன் .

மற்ற விவரங்கள் , பின்பு நடந்தவை ...அடுத்தப் பகுதியில் ....

மீண்டும் சந்திக்கிறேன் ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Jul-15, 7:09 pm)
பார்வை : 301

சிறந்த கட்டுரைகள்

மேலே