தேடினேன் கண்டுகொண்டேன்
ஒரு குழந்தையின் இனம், மதம், மொழி, நிறம், கலை, கலாச்சாரம் எதுவாக இருப்பினும் அந்தக் குழந்தையைக் காணும்போது இந்த வேறுபாடுகள் எவையும் இன்றி எமது உள்ளத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று தேடினேன்.
ஒவ்வொரு குழந்தையும் இயற்கையின் பிரதிபலிப்பைத் தவிர மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த வகையான வகைப்படுத்தலையும் பிரதிபலிப்பதில்லை என்பதோடு ஒவ்வொரு மனிதனிடமும் ஆழத்தில் பதிந்து கிடக்கும் குழந்தையின் இந்த இயல்பு குழந்தைகளைக் காணும்போது பிரதிபலிக்கின்றது என்பதையும் கண்டுகொண்டேன்.
அத்துடன் .......
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே தற்போது எம்மிடமுள்ள குணாதிசயங்களுடன் பிறந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று தேடினேன். ஒவ்வொரு தாயும் முதலாவது குழந்தையைப் பெற்றவுடன் ‘பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே’ என்ற ஒரு வரியை மீண்டும் மீண்டும் பாடிப் பைத்தியமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நாம் அனைவரும் அநாதை இல்லங்களின் எண்ணிக்கைகளை அதிகரித்திருப்போம் எனக் கண்டுகொண்டேன்.
அன்புடன் கே.ஜி மாஸ்டர்
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
