காந்தியக் காதலன்..!!

காந்தியக் காதலன்

சல்லடை ஒன்றை
செவியில் இருத்தி
என் பேச்சுக்களுக்கு மட்டும்
செவிடாகி விடுகிறாள்..என்
சோகக் கதை கேட்க
என் தோழன் என்ன பாவம் செய்தான்..!!
வாய் மூடிக் கொள்கிறேன்..!!

அவள் முகமலரும் போது
கண்கள் ரசித்துவிட்டு
கண்ணீருக்கு வழிவிட்டது
முகம் முறைக்கும் போது..
என் தோழன் அழவேண்டாம் என்று
கண்மூடிக் கொள்கிறேன்..!!

என் பெயரை அவள் கூறக்
காத்துக் கொண்டே இருந்தேன்..
நிராசையான ஆசைகளோடு
மற்றவருடன் அவள் பேசிய
செஞ்சொற்களும் கடுஞ்சொற்களாக
செவிகளுக்கும் விடைகொடுக்கிறேன்..!!
இப்படிக்கு,
காந்தியக் காதலன்..!!

எழுதியவர் : Karthik.M.R (18-May-11, 6:35 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 512

மேலே