உனக்காக

தினமும் ஒரு கவிதை
திகட்டாத உன் நினைவுகளோடு…….
திருடிவிட்டாய் என் இதழ்களை
மறந்துவிட்டேன் என் வலிகளை…….
மலர்ந்தேன் நான் தினமும்
கலையாத உன் கருங்கூந்தலோடு……..
உணர்வில் கலந்த உன்னை
உயிரோடு கலக்க துடிக்கிறேன்
உன்னால் தானடி நான்
அனுதினமும் பிறக்கிறேன்.....
உன் இதயச்சுவரில் அகப்பட்ட நான்
உன் கவிதையில் எழுத்துப்பிழையாக
வந்தாலும் என் வாழ்க்கை சுகமாகும்.....