அன்பின் கவின் கவி

1 லிட்டர் = 910 கிராம்

உன் மீது
நான்
கிலோ கணக்கில்
அன்பு வைத்துள்ளேன்!

உன் மீது
நான்
லிட்டர் லிட்டராக
அன்பை பாய்ச்சுகிறேன்!(அன்பு வைத்துள்ளேன்!)

உன் மீது
நான் தான்
அதிகம் பாசம்
வைத்துள்ளேன்...

இல்லை

நான் தான் அதிகம்
பாசம் வைத்துள்ளேன்...

இல்லவே இல்லை

நான் தான்....

இல்லை

நான் தான்....



என் 0.91கிலோ
அன்பே!
உன் 1லிட்டர்
அன்புக்குத் தான்
நிகரானது(சமமானது)...


அப்படி என்றால்(அப்ப)
யார் அதிகமாய்(அதிகமா)
அன்பு வைத்துள்ளது(வச்சிர்கறது)
நான் தானே!

இல்லவே இல்லை(இல்ல)

என் 1லிட்டர்
அன்பிற்கு !
உன்னுடைய
வெறும் 0.91கிலோ
அன்புதான்
சமமாகிறது...

கணவன்:

கண்ணே!
உன் அன்பு!
என் அன்பு!
என்று எதுவும் இல்லை!
நாம் இருவரும்
சேர்ந்து வாழும் இந்த
வாழ்க்கை தரும்
புரிதல் தான்
உண்மையான அன்பு!

மனைவி:

கண்ணாளனே!
இதைத் தான்
நானும் கூறவந்தேன்!
எனை முந்தி விட்டீர்கள்!


அன்பு ஒன்றும்
எடை போட்டு
வாங்க
கத்தரிக்காயோ!
இல்லை
அளந்து ஊற்றும்
பாலோ அல்லவே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் செவி கேட்ட அன்பு தமிழ் வரிகள்
---------------------------------------------------------

அன்பிற்கும்
உண்டோ
அடைக்கும் தாழ்!
~~~~~~~~~~~~~~~~~~~~
ஆறு பெருகிவரின்
அணை கட்டலாகும்!
அன்பின் பாதையில்
அணை இடலாமோ!

~இந்த வரிகள் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் 'சபாஷ் சரியான போட்டி' பாடலில் வரும்.

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Jul-15, 6:40 pm)
Tanglish : anbin kavin kavi
பார்வை : 91

மேலே