கப்பலொன்று கரைதட்டியது

..."" கப்பலொன்று கரைதட்டியது ""...

தேசத்தின் நாவாய் நீண்ட
எந்தன் முகவை மாநகரின்
அழகியதொரு குட்டி தீவாம்
முடிசூடும் மணி மகுடமாய்
இரு கடல்கள் சூழ்ந்திருக்கும்
வரம்பெற்ற இராமேஸ்வரம்,,,

என் குடியாட்சி கண்டெடுத்த
தலைசிறந்த முதல் மகனாம்
குடியரசு தலைமை கண்ட
அறிவியலின் ஒரு சிகரமாம்
கொஞ்சிடும் மொழிபேசியே
அக்கினியைத் தந்தவனாம் ,,,

விதைத்தால் விளைந்திடும்
இருந்தாலும் உனக்கு ஐயமே
மண்ணுக்குள் விதைத்தாலது
மக்குமோ மரமாகுமோ என்றே
ஆழக்குழி தோண்டி அழகாய்
மக்கள் மனதுக்குள் விதைத்தாய்,,,

குழந்தைகளே எதிர்காலமென
எட்டுத்திக்கும் சிட்டாய் பறந்து
அறிவு பசிக்கு பால் புகடியவன்
இருபதுக்கு இருபதெடுக்க(2020)
கனவுகாண சொல்லித் தந்தே
கவனமாய் இருக்கச் செய்தான்,,,

பாலை நிலத்தில் பிறந்தாலும்
பசியோடு நீ வளர்ந்தாலும்
தேசமெங்கும் அறிவுக் கதிரால்
சோலைகளே செய்துவிட்டாய்
உப்புக்காற்றை சுவாசித்ததால்
நாட்டின்மீது நன்றி கொண்டாய்,,,

தன் நெஞ்சிலேற்றி தேசத்தை
வழிகாட்டி உயர்த்திவிட்ட
கடல்தேசத்து சிம்மாசனமாம்
விதியின் மரபாம் உயிரினை
காலன் கைப்பற்ற கலாமெனும்
கப்பலொன்று கரைதட்டியது,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (29-Jul-15, 10:15 am)
பார்வை : 59

மேலே