கணவனென்பதால் சபிக்கப்படுபவன்~ஆதர்ஷ்ஜி

கணவனென்பதால் சபிக்கப்படுபவன்~ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தூர் மரத்தை கொத்திச் சாய்த்துப் பின்
கிளையில் துயிலவெண்ணும் பறவையோ நீ ?

அஸ்திவாரத்தை உடைத்தெடுத்துக் கல்பெயர்த்து
அதன் மேல் மாடிகள் கட்டவெண்ணும் மேதையோ நீ?

துடுப்புகள் பாரமென்று தூக்கியெறிந்து பின்
நடுக்கடலில் தவிக்கும் மூடப் பிறவியோ நீ....

என் கண்ணீரைத் துடைக்க வேண்டிய உன் கைகள்

என் கண்களைக் கொய்தெறிந்து

கண்களிருந்தால்தானே கண்ணீர் வருமென்பாயோ நீ ?

மாய மான் அது எனச் சொல்லி
ஓடாது உனைக் காப்பதால் நான் ராமனே இல்லையென்பாயோ நீ ..

மருந்தைப் புகட்டும் தாயின் மார்பில் உதைத்திடும்
அருந்த மறுக்கும் முரட்டுக் குழந்தையோ நீ....?

என்னவாக நீயிருப்பினும்

என்னவளாயிருந்து விடு என் மனையாளே ...

அணிந்த நாகம் கழுத்தில் கடித்திடினும்

ஆலால கண்டனை விடமென்ன செய்யும் ...

~ஆதர்ஷ்ஜி

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (29-Jul-15, 9:55 am)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 1691

மேலே