தேசத்தின் தூண்கள்
பறந்து விரிந்த பாரத தேசம்
பகைமை காட்டும் அன்னியர் சுவாசம்
தேசம் காக்கும் ராணுவ வீரர்
தேய்வார் என்றும் தியாகத்தோடு .............
காற்றும் மழையும் கடும் குளிரும்
கண்டு அடைவார் பெரும் துயரம்
எத்தனை இன்னல் இருந்த போதும்
எல்லையை காப்பார் தினந்தோறும் ........
எதிரிகள் மிரட்டல் , எதிர்த்து நிற்பார்
எதுவந்த போதும் துணிந்து நிற்பார்
உயிரினை பற்றி கவலை இல்லை
ஓய்விற்கு இங்கே இடங்கள் இல்லை .............
இரவு பகல் விழித்து கிடப்பார்
இந்திய மண்ணை காத்து நடப்பார்
நாம் உறங்க அவரோ விழிப்பார்
நாடே உயிராய் மதித்து காப்பர் ...........
தாய்க்கும் தந்தைக்கும் தமயன் ஆற்றும்
தனிப்பெரும் பணியை இதுவோ மிஞ்சும்
ஊரும் நாடும் பெரிதாய் என்னும்
உன்னத பணியே ராணுவம் ஆகும் ...........
நாடகம் ஆடும் நடிப்பு சினிமா
நாயகர் ஆவார் நல்லவரென்று -
ஊரும் பேரும் தெரிய ஒருவர்
உண்மையில் காத்தால் நாயகர் தானே ...........
தேசம் காக்கும் தூண்கள் இவர்கள்
தியாகம் செய்யும் நாயகர் இவர்கள்
இந்தியர் எவரும் வணங்கி நிற்போம்
இவரின் புகழை உயர்த்தி சொல்வோம் ...........
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
ராணுவம் அதிலே பங்கு கொள்வோம்
ஒரு ஒரு மனிதனும் தியாகத்தோடு
நாட்டினை காக்க துணிந்து செல்வோம் ...........
ஜெய் ஹிந்த்
நாட்டு பற்றோடு
கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை