மாமனிதர் கலாமுக்கு ஒரு கதை அஞ்சலி

கதையாஞ்சலி
(மனிதனின் சுபாபமே வாழ்வில் சிறிது ஏற்றம் கண்டாலும் யதார்த்த வாழ்வை தொலைத்து மாய நடிப்பிலே மயங்கி வீழ்வர். வானவில் நடிப்பு வாழ்க்கை எல்லோர்க்கும் தெரிந்ததே, ஆனால் நிலைத்த வானமாய் புகழ் படைத்தும் நடிக்க விரும்பா ஏவுகணை நாயகா,
மண்ணில் உன் எளிமையும்
விண்ணில் உன் சாதனையும்
எண்ணில் இந்த பூமி தாய் வியக்குமே
மாமனிதர் கலாம் இந்த கதையும்
உனக்கு ஒரு சலாம். )


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் செய்தி அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. பூமியை சக்திவாய்ந்த ஒரு ஏவுகனை மூலம் தகர்க்க போவதாக சவால்விட்டது அந்த மிரட்டல் மின்னஞ்சல். அது எங்கிருந்து அனுப்பட்டது என அறிய பெரிய அறிவுஜீவிகள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர். பூமியிலிருந்து பல கோடி மில்க்வே மைல்களை தாண்டி அது வந்திருப்பதாக சந்தேகப்பட்டனர். அதை உறுதிப் படுத்தும் விதத்தில் அதே மின்னஞ்சலிருந்து மற்றொரு தகவலும் வந்தது.
அதில் “அறிவுஜீவிகளே ஆராய்ச்சியை கைவிடுங்கள் அழிவுக்கு தயாராகுங்கள். 29.07.2015ல் எங்களுடைய கிரகமிவிட்டு கிரகம் பாயும் ஏவுகணைகளில் பல நுறு கோடி அணுக்களை நிரப்பி உங்கள் பூமியை சுடுகாடாக்க முடிவு செய்து விட்டோம் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்“ by Mr. zouvee (Director & Father of missile) bluetoe planet. அது உண்மையான வேற்று கிரக தகவலா? என்பதை உறுதி செய்ய உலக விஞ்ஞானிகள் ஒன்று கூடி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருள்களில் அந்த மின்னஞ்சலை ஆய்வு செய்த போது அது புளுட்டோ கிரகத்தில் இருந்து வந்தது என உறுதி செய்யப்பட்டது.
வேற்றுகிரகவாசிகளின் இந்த ஏவுகணை தாக்குதலை முறியடிக்க விஞ்ஞானி டாக்டர் ரிச்மண்ட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பூமியில் எந்த இடத்தில் தாக்குதல் நிகழும் என அறிய முற்பட்டனர் சிறிது நேரத்தில் விஞ்ஞானி ரிச்மண்டின் மின்னஞ்சலுக்கு பு.கிரகத்திலிருந்து மற்றொரு தகவலும் வந்தது. “டியர் ரிச்மண்ட் ரொம்ப யோசிகாதீங்க நாங்கள் பூமியில் தாக்க போகும் இடம் சிரியா. இந்த ஒரு தாக்குதலே போதும் உங்கள் உலகமே பஸ்பமாக” என்று சிரியாய் சிரித்தது அந்த புளுடோ மின்னஞ்சல்.
நம்முடைய அனைத்து ரகசியங்களும் எப்படி அந்த பு.கிரக வாசிகளுக்கு தெரிகிறது என மண்டையை குடைந்தனர் ரிச்மண்ட் குழுவினர். இனிமேல் பாதுகாப்பு மிகுந்த பெண்டகனில் ரகசிய பதுங்கு அறையில் விஞ்ஞானிகள் ஒன்று கூடி தாக்குதலை முறியடிக்க திட்டம் வகுப்பது என முடிவு செய்தனர். அதையும் மோப்பம் பிடித்த பு.வே.கி.வாசிகள் மீண்டும் மின்னஞ்சலில் பயமுறுத்தினர். "பென்டகன் மட்டும்மல்ல உலகில் எந்த மூலையில் உட்கார்ந்து யோசித்தாலும் எங்கள் மூளையை வெல்ல உங்களால் முடியாது. நாங்கள் தயாரித்த ஏவுகனைகள் நிமிடத்தில் கிரகம் விட்டு கிரகம் பாயும் . உங்களுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் சாதாரண ஏவுகனைகள் எங்களுடைய குழந்தைகள் நியூ இயருக்கு பயன்படுத்தும் பட்டாசு போன்றவைகள்தான் என எகத்தாளமாய் சிரித்தது .
இனி வேறு வழியே இல்லை. ப்ளுடோவின் தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் நாம் சென்றால் மட்டுமே ரகசிய திட்டம் தீட்ட
முடியும் என்ற முடிவுக்கு வந்தது ரிச்மண்ட் குழு . முடிவில் அவர்கள் தேர்வு செய்த இடம் புதுச்சேரியில் உள்ள திருனள்ளாறு என்ற ஊர் . அங்குள்ள சனீஸ்வரர் கோயிலை நெருங்கும் எந்த செயற்கைகோளும் செயல் இழந்துவிடும். இது உலகில் உள்ள எல்லா விஞ்ஞானிகளும் அறிந்த உண்மை. எனவே வானியல் மேதைகள் பலரும் திருநள்ளாரில் குவிந்தனர். ரகசிய திட்டம் தயாரானது . ஆனால் பு .கிரக வாசிகளின் ஏவுகனை தலைவருக்கோ இதை கண்டு பிடிக்க முடியவில்லை . விஞ்ஞானிகளின் இருப்பிடம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை . பூமியில் அவர்களின் திட்டம் என்ன ? ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று அறிய அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் வானியல் மேதைகள் தென்னிந்தியாவில் குவிந்துள்ளனர் என்று மட்டும் புரிந்தது. எனவே எதிர்காலத்தை சரியாக கணித்து கூறும் 300 வயதுடைய புளுடோ கிரக ஞானி ஒருவரை அணுகினர். ஒரு சில வார்த்தை மட்டுமே சுறுக்கமாக பேசும் அவரிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.
“பூமியை தகர்க்கும் நம்முடைய ஏவுகணைகள் சோதனை தோல்வி அடையுமா?
“இல்லை” என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.
“நன்றி .. நம்முடைய தாக்குதலில் பூமி தவிடுபொடியாகுமா?”
இதற்கும் “இல்லை” என்றே பதில் வந்த்து. குழம்பி போன Mr.Zouvee “அப்படியெனில் என்னதான் நடக்கும்” என்று கோபமாக கேட்டார். அதற்கு அந்த ஞானியிடம் இருந்து வந்த பதில்
“A powerful scientific missile will be launched to space from India on 27.07.2015” என்று முடித்துக் கொண்டார். வேற்று கிரக ஏவுகணை தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை. தங்களுடைய தாக்குதலை குறிப்பிட்டபட்ட நாளில் நடத்தி முடிக்க முடிவுச் செய்தார். இருப்பினும் என்ன நடக்குமோ என்ற அச்சம் மட்டும் இருந்தது. அந்த ஞானி பயமுறுத்திய 27.07.2015 வந்து சென்றது எந்த மாற்றமும் புளுட்டோவில் நிகழவில்லை. சரி பூமியில் இருந்து 27ஆம் தேதி விண்ணுக்கு ஏதாவது ஏவுகணைகள் அனுப்பபட்டதா என்று அறிய செயற்கை கோள் உதவியுடன் தேடி பார்த்தான் Zouvee அப்போது இந்தியாவை சார்ந்த முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் காலம் ஆனார் என்ற செய்தியை அனைத்து இந்திய ஊடகங்ளும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.
ஏவுகனைகளின் தந்தை என்று அறியப்பட்ட கலாம் மண்ணில் இருந்து விண்ணில் மறைத்ததை எண்ணி , எண்ணிலடங்கா இந்தியர்கள் கண்ணீர் மழை பெய்ததை கண்டு வியந்தார் ஜூவி .
அந்த 300 வயதுடைய ப்ளுடோ ஞானி powerful scientific missile என்று குறிப்பிட்டது Dr. அப்துல் கலாமை என்று புரிந்தது . அவரை பற்றி இந்திய மக்கள் பெருமையாக குறிப்பிட்டதை எண்ணி மெய் சிலிர்த்தார் ஜூவி .
உடனடியாக தன் சக கிரக விஞ்ஞானிகளின் கூட்டத்தை கூட்டினார். ஒட்டுமொத்த புளுடோ விஞ்ஞானிகளும் தாக்குதலுக்கு தயாராக இருக்க பூமியை தகர்க்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் ஜூவி. அதிர்ச்சியில் உறைந்த அந்த கூட்டமோ இந்த முடிவால் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்தனர். ஆனால் அவரோ “நாம் அனைவரும் அழிவுக்கு துணையாக நிற்கிறோம் ஆனால் பூமியில் வாழ்ந்த அப்துல் கலாம் என்ற விஞ்ஞானியோ தன் வாழ்நாள் முழுவதும் ஆக்கப்பூர்வ செயல்களை மட்டுமே சிந்தித்து செயல்பட்டுள்ளார். மரணத்தின் கடைசி நிமிடத்தில்கூட மாணவர்களிடயே நம்பிக்கையை விதைத்துள்ளார். அது ஒரு நாள் நிச்சயம் விருட்சமாகும். நம்முடைய விஞ்ஞானமும் ஒரு நாள் வேறு ஒரு வேற்று கிரக வாசிகளால் தோற்று போகலாம்.ஆனால் காலத்தையும் வென்ற கலாம் போன்ற ஒரு மாமனிதரை நம்மால் உருவாக்கவே முடியாது என்று தலைகுனிந்தார்.
பூமியை தாக்கும் திட்டம் கைவிடப்பட்டதை நாசாவுக்கும் தெரியப் படுத்தினார். மறுநாள் உலக மக்களே மாமனிதர் கலாமை போற்றி வணங்கியது.

குறிப்பு:
காலம் சென்ற பாரத ரத்னா ஏவுகணைகளின் தந்தை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு இந்த கற்பனை சிறுகதையை கதாஞ்சலியாக அவர் திருபாதங்களுக்கு சமர்பிக்கிறேன்.
கண்ணீர் துளிகளுடன்
முரளி

எழுதியவர் : (29-Jul-15, 10:20 am)
பார்வை : 411

மேலே