புல்லாய்

புல்லாய் பிறந்தாலும்
புவியில் என் ஊர்வலம்
புயலுக்கும் அசைவதில்லை
பூகம்பத்திலும் சிதறுவதில்லை
சீ.. நீ.. ஒரு புல் என
சகதியில் அமிழ்திடினும்
சடுதியில் உயிர்த்தெழுவேன்
சாய்வதில்லை
இந்த தன்னம்பிக்கையின்
இலக்கணமாய்
இறுதி வரை பயணம் தொடருவேன்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (29-Jul-15, 2:31 pm)
Tanglish : pullaai
பார்வை : 90

மேலே