எங்கள் பிள்ளை தமிழ்

நீங்கள் அகரம் படித்த போது
நாங்கள் ஆயுதம் படித்தோம்

உங்கள் கழுத்தில் சவுரன் தொங்க
எங்கள் கழுத்தில் சையனைடு குப்பி

உங்கள் வழி எங்கும் புல்வெளி
எங்கள் வழிதோறும் புதை வெடிகள்

நீங்கள் வலிதரும் தரும் காயங்களுக்கு
உயிர் விடுகிறாய்

உயிர் வலி காயங்களுடன் வாழ்கிறோம்

நீங்கள் உங்கள் பிள்ளை தமிழை கேட்கும்
போது
நாங்கள் எங்கள் பிள்ளைகளின் தமிழ்க்கு போராடுகிறோம்

எழுதியவர் : மது (19-May-11, 12:49 pm)
பார்வை : 475

மேலே