காரணம் சரியல்ல

நடந்து வந்த பாதையினை மறந்துவிட்டாய்
முழுமையாய்,
நீ என்னை அடைந்த பாதையின் கடினத்தை
உணர்ந்தவள்தான்,
ஆனாலும் காலம் தாழ்ந்து
உடல் முழுமைக்கும் காட்டிவிட்டாய்
உன் முள் முகத்தை,

ஒரு வார்த்தையில் நான் புரியுமாறு
காரணம் கூறிவிட்டாய்,

முன்பே உணரவில்லையா என் முகத்தினில்
நான் கொண்ட மச்சத்தை.

தெரிந்தபின்னும் ஏனோ எச்சில் உமிழ்வது!

புரியவேயில்லை.

எழுதியவர் : jujuma (19-May-11, 1:12 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 370

மேலே