அராஜகம்
குதித்துக் கும்மாளமிடும் குளத்து
மீனுக்குத் தெரிவதில்லை தான் குத்தகைதாரனின் சொத்தென்று.
அலைந்து திரிந்து மேய்ந்து அன்பு செய்யும் ஆட்டுக்கு புரிவதில்லை தான் உண்ணும் உணவெல்லாம் விருந்துக்கே என்று.
மரணத்தின் விளிம்புவரை உண்டுகளிக்கும்
பரிதாபக் கோழிகளின் தொடையும், நெஞ்சையும்
நீர் சொட்டப் ரசிக்கிறோம்.
ஒருநாளும் புரியப்போவதில்லை தான்
காற்றிலே எரிக்கப்படப்போகிறோம்
என்று மனிதனுக்கு.
அதற்குள் எத்தனை ஆட்சி, எத்தனை அதிகாரம், எத்தனை அகங்காரம், எத்தனை ஆணவம்.
அழிவை செய்து அழிவை அடைவது
இன்பமா?