பேக்கரும்பில் நீயிருப்பீர் நெஞ்சம் நிமிர்ந்து - நேரிசை வெண்பா

கற்பதிலும், கற்றதைக் கற்றுத் தருவதிலும்
அற்புத அப்துல் கலாமேநீர்! – பொற்புடைய
உம்மையே போற்றித்தான் உள்ளத்தில் பேணுகிறோம்
எம்மையும் காப்பீர் இனிது! 1

புண்ணிய நற்றலமாம் போற்றும்ரா மேஸ்வரத்தில்
புண்ணிய ராய்,அய்யா நீர்,பிறந்தீர் – எண்ணிடிலோ
ஆயிரத்தில் நீரொருவர் அன்புகலாம் பேக்கரும்பில்
நீயிருப்பீர் நெஞ்சம் நிமிர்ந்து! 2

அப்துல் கலாம்நீர் அரியவராம் காண்பதற்(கு)
எப்போதும் நல்லறிவில் ஏற்றமுடன் – முப்போதும்
நட்பினுக்கும் இன்முகம் நாடுமவர் என்றுமே
கொட்புடைய உத்தமராம் கூறு! 3
கொட்பு - கொள், Intention, idea

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jul-15, 11:35 am)
பார்வை : 947

மேலே