காதல் அத்தியாயம்
அந்த உமா என்னையே
அடிக்கடி திரும்ப பார்த்துக்
கொண்டே இருந்தாள்...
இவள் எதற்காக என்னையே
பார்த்துக் கொண்டு இருந்தாள்..?
என்று எனக்கு புரியவே
இல்லை...
அவள் என்னைக்
காதலித்தாள் என்று நான் புரிந்து கொள்ளஅடுத்தடுத்த
சம்பவங்கள் நடந்தது...
கழுத்தில் கருப்பு
கயறு கட்டிக்
கொண்டு வந்த பொழுது
உனக்கு மிகவும் அழகாக
இருக்கு என்றாள்....
எனக்கு வெயிலில்
வேர்வை சிந்தினாள் அவள்
கவலைப்பட்டாள்....
என் அத்தை
பெண்ணிடம் பேசிவிட்டு
அவளை தான் கட்டிக்க
போகிறேன் என்று நண்பனிடம் விளையாட்டாக சொன்னேன்,,, பக்கத்தில் உமா நின்று கொண்டிருந்தாள் என்று
தெரிந்து தான் சொன்னேன்..
உமா
குமுறிக் குமுறி
அழுதாள்...
என் மீது அவள்
காதல் எப்படிப்பட்டது
என்று நிரூபிக்க
ஒரு சம்பவம்...
ஒரு முறை புதியதாக
ஓரு செருப்பு வாங்கினேன்..
செருப்புகளை வகுப்பறை
வாசலில் விட்டு விட்டு
உள்ளே செல்வதும்
பள்ளி முடிந்ததும் அணிந்து
கொண்டு வீட்டிற்க்குச்
செல்வதுமாக தான்
இருப்போம்...
ஒரு முறை நான்
பள்ளி முடிந்ததும்
வகுப்பறை வாசலில்
செருப்பை விட்டு விட்டு
மறதியாக வீட்டிற்க்கு
சென்று கொண்டிருந்தேன்...
பள்ளியில் இருந்து வீடு
பக்கத்தில் தான்
இருந்தது...
பள்ளியில் இருந்து
வீட்டிற்கு பாதி தொலைவு தான்
நடந்திருந்தேன்....
பின்னால் யாரோ
ஒடி வரும் சத்தம்...
திரும்பிப் பார்த்தேன்..
உமா கையில் செருப்போடு
என்னை நோக்கி
ஓடி வந்து கொண்டிருந்தாள்..
டே... என்னடா
செருப்ப ஸ்கூல்லையே
போட்டுட்டு வந்துட்ட...??
இந்தா.... என்று என்
காலடியில் போட்டாள்...
ஓடி வந்ததில் அவள்
முகத்தில் வியர்வை அருவியாக...
என் மீது கொண்ட காதலால்
நான் செருப்பை
தவற விட்டு விட்டு
வந்ததை கவனித்து,,
எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்த அன்பு
எந்தப் பெண்ணுக்கு
வரும்...??
அவள் கொண்டு வந்து
கொடுத்த பொழுது
எனக்கு பேசவே வரவில்லை...
திக்கி திணறி
தாங்க்ஸ் சொன்னேன்...
ஒன்றுமே சொல்லாமல்
சிரித்து விட்டு தோழிகளைத்
தேடி ஓடிப் போனாள் உமா....
- அத்தியாயம் தொடரும்