கண்ணீரில் கவிதை

கலாம் அவர்களின்..இழப்பில்..
எனது கவிதைகளின்
கண்ணீர்😰😰😰


நல்ல இதயங்களை ...உருவாக்கிய நல்ல உள்ளம்...அது...
உறக்கம் கொள்கிறது...


வரலாறு ...வருத்தப்படும்...
கண்ணீர் விட்டு...
உன்னை பிரிந்ததற்கு..

முயற்சி தோற்பதில்லை..
உன்னால் முடியும்..
முயன்று பார்..
என்று சொன்னவர்..அவர்

விருச்சம் ஒன்று
விதைகளை நட்டுவிட்டு
துயில் கொள்கிறது ...

கவிதை,ஓவியம்,இசை,இலக்கியம்,அறிவியல்,
அரசியல்...என
பன்முகம் கொண்ட ஒருமுகம்...

மக்களின் லட்சங்களை எண்ணும்..
அரசியல்வாதிகளின்
மத்தியில்...
மக்களிடம்
லட்சியம் விதைத்தவர்...

அரசியல் சூது
தெரியாது...
ஆம் அமெரிக்க கொடியும் அரைகம்பம்
கண்டது ...இவருக்காக

இந்தியாவின்
மிகப்பெரிய
இதயகொள்ளை
கொண்டவர்...இவர் தான்

அதற்கான தண்டனையை ..
மரணத்தை வழங்கிய
இறைவன்
பாவத்தின் பக்கம்...

தாய்நாட்டிற்கும்,தமிழுக்கும் பெருமை
செய்தவர்...
தமிழன் என சொல்லி பெருமைபட்டவர்...

நாம் அனைவரும்
கொட்டிவிட்டோம்...
நம் கண்துளிகளை...
அவர் இழப்பிற்காக
...
அவர் வீட்டு புத்தகங்கள்...
பேச்சுதுணைக்கு
அவர் இல்லாமல்...
தனிமையில் கிடக்கிறது..

அவைகளிடம் யார் போய் சொல்வது..
அவர்..உறங்கிவிட்டார்
என்று...

உண்மை தலைவருக்காக
கண்ணீர் விடுவதில்..
பெருமை கொள்கிறது...
கண்ணீர் துளிகள்...

சில இழப்புகள் ஈடுகட்ட படுவதில்லை ...
எளிமையின் அர்த்தமே..
நீங்களும் அப்படித்தான்
எங்களுக்கு ...

மீண்டும்...திரும்புக
கலாம்..அவர்களே.

‪#‎குமார்ஸ்‬....

எழுதியவர் : குமார்ஸ் (31-Jul-15, 12:42 am)
Tanglish : kanneeril kavithai
பார்வை : 1241

மேலே