தமிழ் T -shirt வாசகம் வடிவம் போட்டி - வில்வா

மழைப் பூக்களை
உதிர்த்துக் கொண்டே இருக்கிறது
பூ வானம் ..என் மடி மட்டும்
இன்னும் நிறையவில்லை!!
*******************************************
சுவாசிக்க பழகு
பூங்காற்றின் மெய் தீண்டல்
இளம் மொட்டுகளில்!!
********************************************
தோல்விகள் தோற்று
வெற்றிக்கு வழி சொல்கின்றன!!
**********************************************
பயம் கொண்டவரைத் தொட
விரும்புவதில்லை வெற்றிக் குழந்தை!!
***********************************************
சில நேரங்களில்
நான் வேண்டி
நாம் அதில் பிறக்கின்றோம்!!
***************************************************
நீ, நான்
கொஞ்சும் காதல்
கொஞ்சம் அதிகமாய்!!
*************************************************
ரோஜாக்களைத் தீண்டுவதில்லை
காதல் முட்கள்!!
************************************************
புது மலர்களுக்காக
கொஞ்சம் காய்ந்த பூக்களும்
நிறைய உதிரி இலைகளும்
காத்துக் கொண்டே இருக்கின்றன
மரங்களின் நிழல் மடியில்!!
********************************************

எழுதியவர் : கார்த்திகா AK (31-Jul-15, 11:09 pm)
பார்வை : 92

மேலே