சிரிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
சிலநேரத்தில் நான்....
மழலை முகத்தில்
இனிமையாக
அதை காண்போர் முகத்தில்
புதுமையாக
மனம் வருந்தசெய்வோர் முகத்தில் வெறுமையாக
மனம் அறிந்து வாழ்ந்தார் முகத்தில்
பசுமையாக
சிலநேரத்தில் நான்...
பொய்யை மறைக்கும் மற்றோர்
பொய்யாக
பித்தமாக; சத்தமாக இருந்தும்
கவலையில்லை எனக்கு
என்றும் நிலைத்திருப்பேன்,
என் மழலைநிலைமாற
இன்னிசையில்
இவ்வுலகில் என்றென்றும்...
சிரிப்பாய்....