உயிர் வாழும் வார்த்தை சொல்லு - ராம்

என்சுவாசக்காற்றே நில்லு! நில்லு! நில்லு!
உயிர் வாழும் வார்த்தை நீயும் கொஞ்சம் சொல்லு!

வளிகொண்ட காற்றாய் தாக்கினாய் என்னை
உன் விழியசைவு போதும் அடைவேனே உன்னை

என் நினைவிலே தோணுது நீ வரும் ஓசை
சத்தமாய் ஒலிக்குது உன் இமைகளின் பாசை

விண்மினி பூச்சியாய் விளக்கேற்றி போகிறாய்
உறங்கும் என்னிரவில் நீ மட்டும் ஒளிர்கிறாய்

துகில் என்னை துரத்த கண்டேன் நம் காதலை
தாய்மடி தாலாடாய் முடிவுறா உன் நினைவலை

தேவதையின் கரம் பற்றி சிலிர்த்துவிட்டேன் என்கனவில்
முழுநிலவில் நட்ச்சத்திரமாய் இடம் பெயர்கிறேன் உன்வழியில்

கனவை கலைக்கிறேன் மறக்கவே உன்னை
உன் நினைவை மறக்கவே மறிக்கிறாய் என்னை

காதலின் வகையினை கண்டேன் உன்னிடம்
அன்பையே ஆயுதமாய் கொண்ட பெண்ணிடம்

வெறுப்பை உன்மீது உமிழவே மாட்டேன்
வெளிப்படும் தருணத்தில் நான் வாழவே மாட்டேன்

நீ விரும்பும் கட்டளை இன்றே எய்து
உழைப்பின் உச்சம் தருகிறேன் பரிசாய் செய்து

காற்றையும் துளைத்தது என்சுவாச கவிதை
மாற்றவே மறுக்குது என் வஞ்சியின் மனதை

காயம்பட கற்றுக்கொண்டேன் கழிந்திடும் எந்நாளும்
அடிக்கடி மறுக்கும் உன்னிடத்தில் என்றாவது என் காதல் மலரும்.

நம்பிக்கையுடன் .......................................

எழுதியவர் : ராம் (1-Aug-15, 4:47 pm)
பார்வை : 285

மேலே