வாழ்க்கை-தத்துவம்

தடம் மாறிய
வார்த்தைகளால்
வழி மாறி போன வாழ்க்கைகள்..
வசந்தம் வர நினைக்க
வாசல் பூட்டியிருந்த கதை..
காலத்தின் ஓடத்தில்
காற்றும் அலையுமாய்
காதல்..
விந்தையான வாழ்க்கையில்
பாட்டின் சந்தம் போல
அங்காங்கே சந்தோசம்..
குறைந்த அழுத்தத்தை
குளிர்விக்கும் மழைபோல
ஆர்ப்பரிக்கும் மனதுக்கு
ஆறுதல் என்றும்
அவள் கண்ணீர் மட்டுமே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (2-Aug-15, 11:10 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
பார்வை : 280

மேலே