உறவு தோள்--- நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களே உறவுகளின்
எண்ணிக்கைக்கும் ஓர் எல்லை உண்டு
ஆனால் நட்பிற்கு எல்லை இல்லை .............

சுயநலம் போற்றிடும் பொய்யான உறவுகளுக்கு இடையே
ரத்தினமாய் ஒளிர்விட்டு இருக்கிறது
பலமுறை நட்பு ............

ஒதுங்கிடும் உறவுகளின் ஒர வஞ்சனைகளை
தகர்த்து தவிடு பொடியாக்குவதில்
நடப்பிற்கு வலிமை அதிகம் .............

தியாகத்தின் அளவீடுகளை கணக்கிடமுடியாத அளவிற்கு
உயர்ந்த இடத்தில் நட்பின்
விசுவாசம் பறந்து கிடக்கிறது ..............

இன்பத்தைவிட துண்பத்தில்
பகிர்கின்ற உறவுகளின் வரிசையில்
நட்பு முதலிடத்தில் ...........

உயிரினை கூட துச்சமாய் நினைத்து
உறவினை மட்டுமே நேசிக்கும்
ஒரே உறவு நட்பு .........

அடிக்கடி முறிதளுக்கும்
பிரிதலுக்கும் இடமளிக்காத
இதயபூர்வ உறவில் நட்பு ............

பணத்தைவிட குணத்திற்கு
முன்னுரிமை அளிப்பதே
நட்பின் நியதி .........

இணையத்தில் இதயத்தில்
எங்குமே நட்பிற்கே
முதலிடம் ..........

நட்பை போற்றுங்கள் தோழர்களே

எழுதியவர் : வினாயகமுருகன் (2-Aug-15, 10:46 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 110

மேலே