திருநெல்வேலிக் கவிதை

நெல்லுக்கு வேலி கட்டி மழை பொழிந்தால்
நெல்லையப்பர் கருணை
நெல் வளம் கொழிக்க மழை பொழிந்தால்
அன்னை காந்திமதியின் கருணை
சொல்லும் பொருளுமென தாமிரவருணி பாய்ந்து வந்தால்
நெல்லை மண்ணுக்கு வளமை
சொல் கட்டி அதற்கு கவி மழை பொழிந்தால்
சொல்லும் தமிழுக்குப் பெருமை !
-----கவின் சாரலன்