பொன் மாலைப் பொழுது
எத்தனையோ இனிய மாலைகள் போன்று
இன்றும் அது போலவே ஒன்று
கடற்கரை அருகில் நான் நின்று
என் அருகில் அவள் நின்று
ஈருயிர் ஓர் உயிர் என
இரு கரங்கள் இணைந்து இருக்க
வெண்ணிலவின் பொன் ஒளியில் தான்
இருவரும் நடந்தோம் அலைகள் சாட்சியாய்
ஏதேதோ வார்த்தைகள்தான் அடிக்கடி கேட்பதுதான்
என்றென்றும் இனிப்பதுப்போல இன்றும் இனித்ததுதான்
ஒளி வீசும் முகம் கொண்டு
பால் நிலவுக்கும் ஒளி சேர்த்தாள்
பொன் பாதம் மண் தொட்ட
அச்சுகளில் கரைகளுக்கு அழகு சேர்த்தாள்
வெள்ளி நகை புன் சிரிப்பில்
கடல் அலைகளுக்கு சினம் தந்தாள்
தேன் தெறிக்கும் இதழ் திறந்து
பொன் மலர்களுக்கு தேன் தந்தாள்
இடை தொட்ட பூந் தென்றலுக்கு
வான் தொட்ட மென்மை தந்தாள்
நேற்றைக்கு சுகம் தந்து சென்றதுபோல்
இன்றும் சுகம் தந்து மயக்குகின்றாள்
நாளைக்கும் சுகம் தருவாய் செந்தமிழே
காத்திருப்பேன் போய் வா பைந்தமிழே.