என் இதயம்
உன்னை பார்த்த போது தான்
என் இதயம்
காதல் உணர்வை அறிந்து கொண்டது
உன்னோடு பேசிய போது தான்
உன் நினைவுகளை
என் இதயம்
கவிதை வார்த்தைகளால்
எழுதிக்கொண்டது.
உன்னோடு பழகிய போது தான்
என் இதயம்
நட்பின் வலிமையை அறிந்துகொண்டது
உன்னோடு வாழ்ந்தபோது தான்
என் இதயம்
வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டது
இன்று
உன்னை பிரிந்தபோது தான்
என் இதயம்
பிரிவின் வலியை உணர்ந்து கொண்டது