மரணிக்கத்தான் வழியில்லை
சிறகிழந்த பறவையாய்
சிறையில் இன்று வாடுகின்றேன்
சிந்தனைகள் முடங்கிய
சீரழிந்த வாழ்விது
உறவுகளை நினைக்கையில்
உள்ளம் நொந்து அழுகுது
பிரிவை எண்ணி வாட்டுது
பிரிந்த துயரம் தவிக்குது
போகும் பாதை தொடரல
பேசும் வார்த்தை புரியல
நினைவு கண்ணீர் வடிக்குது
நின்மதி ஒன்றும் கிடைக்கல
பாசம் வைத்த பாவத்தால்
பகல் இரவாய் அழுகின்றேன்
எதற்கு இந்த சோதனை
எப்ப தான் தீருமோ?
விழி இரண்டும் ஈரங்கள்
விம்மி விம்மி அழுகுது
மனம் மடிய நினைக்குது
மரணிக்கத்தான் வழியில்லை.