தலையணை இரவுகள்

எத்தனை இரவுகள்தான்
தலையணையைக் கட்டிக்கொள்வது
இதோ அணைக்க வரும் எனக்கு
இன்றாவது பொங்கித் தா
ஏதேதோ பேசி மயக்கிவிட்ட
அத்தனைப் பேரையும்
சப்தமின்றி சமாளித்து வரவேண்டாமா
தவறி காணும் எவளேனும்
என் சட்டையைப் பிடித்து
உலுக்கும் முன்னே
இரு இரு நேரம் பார்த்து வருகிறேன்
என்னவோ தெரியவில்லை
உன் அறைக்குள்
நான் பிரவேசிக்கின்றபோது மாத்திரமே
நீ கால்கள் குளிர்ந்து
படுக்கையில்
சுருண்டுக் கிடக்கிறாய் ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (4-Aug-15, 1:36 pm)
பார்வை : 217

மேலே