மரியாதை ராமன் கதைகள்
வீடு கட்டும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது
வீடு கட்டுவதற்காக குலி தோண்டும் போது டப் என்று கடப்பாறை ஏதோ பெட்டியில் மோதியது
அதை வெளியே எடுத்து பார்த்த போது அந்த பெட்டி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது
அந்த பெட்டியிணுள் விலை உயர்ந்த ஒரு நீலவைரம் இருந்தது
அந்த நிலத்தின் உரிமையாளர் இது என் நிலத்தில் இருந்ததால் இது எனக்கு தான் சொந்தம் என்றார்,அந்த நிலத்தை விற்றவரோ இது எனக்கு தான் சொந்தம் என்றார்,அந்த வீட்டைக்
கட்டும் செட்டியாரோ இதை நான்
தான் முதலில் பார்த்தேன் அதனால் இது எனக்கு சொந்தம் என்றார்
மூவரும் சேர்ந்து மரியாதை ராமனிடம் சென்று நடந்ததை கூறினர்,மரியாதைராமனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தீர்ப்பை ஒரு வாரம் கழித்து கூறுவதாகவும் மூவரும் சென்று ஒரு வாரம் கழித்து வருமாறும் கூறினார், மூவருக்கும் பெரும் வாக்குவாதம் ஒரு வாரம் வரை இந்த புதையல் யாரிடம் இருக்க வேண்டும் என்று,
இது என்னிடமே இருக்கட்டும் என்று கூறி அவர்களை அணுப்பி வைத்தார் மரியாதைராமன்,
மரியாதை ராமனுக்கோ பெரிய குழப்பம் வைரத்தையும் தங்க பெட்டியையும் எவ்வாறு மூன்றாக பிரிக்க முடியும் இப்பொழுது என்ன செய்வது
என்று,
ஒரு வாரம் கழிந்தது மீண்டும் அதே இடத்தில் தீர்ப்பைக் கேட்கவும் தீர்ப்புக்காகவும் மக்களும் மூவரும் கூடினர்,
சில மாதங்களுக்கு முன்பு அரச கஜானாவிலிருந்து ஒரு தங்கப் பெட்டியும் அதிலிருந்த வைரமும் திருடு போனது, அதை திருடியது மட்டுமல்லாமல் அதற்கு பங்கும் கேட்டு வந்ததற்கு மூவருக்கும் முன்னூறு சாட்டையடி பகிர்ந்தளிக்கப்படும் என்று தீர்ப்பை கூறினார்,
இது தான் பேராசை பெருநஷ்டம் என்று மூவரும் சாட்டையடி பட்டு உணர்ந்தனர்