கடைசி சந்திப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
காதலில் ஆறு வருடங்கள் கழிந்தன..... செல்ல சீண்டல்கள் பொய் கோபங்கள் எதிர்பாரத முத்தங்கள் வருடங்கள் நாட்களாக கழிந்தன அன்று அழைத்து சொன்னாள் இரவு முக்கியமான விசயம் பேச வேண்டும் என..... நான் குதூகலித்தேன் ஆறு வருட தவம் முடிவுக்கு வர போகிறது என இதுதான் கடைசி சந்திப்பு இனி மணமேடை தான் என நினைத்தேன்... இரவும் வந்தது அவளும் வந்தாள் பெண்ணுக்கே உள்ள குணத்துடன் தாமதமாக... வந்தவள் சொல்லில் வேல் பாய்ச்சினால் மதம் மாறினால் உனை நான் மணப்பேன் என? அப்போது முடிவு செய்தேன் இதுதான் இறுதி சந்திப்பு என! காதலுக்கு தேவை மனம் மதம் அல்ல இனி நி நீயாக நான் நானாக... அஸ்வா