ஒரு வேலையில்லா பட்டதாரி

பரபரப்பான சாலை...
அவசரகதியில் இயங்கிக்
கொண்டிருக்கிறது நகரம்...
எதையோ பிடிக்கப் போகும்
அவசரத்தில் குறுக்கும்
நெடுக்குமாக விரைந்து கொண்டிருக்கும்
வாகனங்கள்,,,
மனித பிரஜைகள்....
ஒவ்வொருக்கும் எதோ ஓரு
வேலை இருக்கிறது..
பணத்தை தேடிய வேலைகள்..
இந்தப் பணம் மனிதர்களை
எப்படியெல்லாம் ஆட்டி
வைக்கிறது..
அதற்க்காக தானே வாழ்வின்
தினசரி போராட்டங்கள்..
ஆனால் பணம் என்று மே
தேவைபடுபவனுக்கு அதிகமாக
சென்று சேர்வதே இல்லை...
பணத்தை தேடி தொடங்கும்
இந்த வாழ்வும் பணத்தாலே
முடிவு பெற்று விடுகிறது...
டே.. பொறம்போக்கு வீட்ல
சொல்லிட்டு வந்துட்டியா ஓரமா
போ டா...
ஆட்டோகாரனின் திட்டு
சுய நினைவுக் கு கொண்டு வந்தது..
நான்..
பட்டதாரி.
வேலையில்லா பட்டதாரி
கல்லூரி முடித்து ஐந்து
வருடங்களாகி விட்டது,,,
வேலை தான் கிடைக்கவில்லை..
எத்தனையோ வேலைக்கான
விண்ணப்பங்கள்,, தேர்வுகள்,,
இன்டர்வியூக்கள்...
நம்பிக்கை கொண்டு படிக்க
வைத்த அப்பாவிடம்,,
ஓவ்வொரு முறையும்
பணம் கேட்க்கும்
பொழுது அவர் கண்களில்
அவநம்பிக்கைகள்....
அந்த உயர்ந்த
கட்டிடத்திலுள் இன்டர்வியூக் காக
நுழைந்தேன்..
மலைத்தேன்...
அங்கு என்னைப் போலவே
வேலையில்லா பட்டதாரிகள்...
ஓரே ஒரு போஸ்ட்க்கு இத்தனை
பேரா.?
வேலை கிடைக்குமா
என்ற அவநம்பிக்கை,,
அந்த றூற்றில் ஓருவராக
நான் இருந்து விடக் கூடும்
என்ற நம்பிக்கை...
இங்க ஜெ. அருள் யாருப்பா..
நான் தான்..
உள்ளே போ...
கதவைத் திறந்து உள்
நுழைந்தேன்..
குட் மார்னிங் சார்...
எஸ் மார்னிங்...
உட்காருங்க..
உட்கார்ந்து என்
மதிப்பெண் குப்பைகளை
அவரிடம் நீட்டினேன்..
மேலொட்டமாக பார்த்து
விட்டு,,
குட்,,
உங்களை சில கேள்வி
கேக்குறேன் ஆன்ஸ் சர்
சொல்லுங்க....
எல்லா கேள்விக்கும்
சரியாக விடையளித்தேன்..
(அப்படி தான் நம்பினேன்)
இன்டர்வியூ முடிந்தது..
வெரி குட்...
எல்லாத்துக்கும் சரியா
ஆன்சர் சொன்னாங்க..
உங்களுக்கு முன் அனுபவம்
இருக்கா..?
இல்ல சார்..
சரி பரவாயில்லை
நீங்க செலெக்ட் ஆகி டிங்.......
ட்ரிங்....
தொலைபேசி அலறியது...
எஸ்...
............
சரி உள்ள அனுப்பு..
கதவு திறந்து உள்ளே
நுழைந்தான் அவன்...
உடுத்திய உடையிலிருந்து
அத்தனையும் பணக்காரத்தனம்...
சார் இந்த போஸ்ட் க்கு
என்னை சேர்க்க ஆர்டர்
வந்திருக்கு...
இந்தாங்க லெட்டர்...
லெட்டரை வாங்கி
படித்தார் மனேஜர்
பின்பு என்னை
நோக்கி,,
சரி தம்பி
உங்களை செலக்ட் பண்ணா
உங்களுக்கு லெட்டர்
அனுப்புறோம்...
இப்ப நீங்க
போகலாம்.....
இத்தனையும் என்
கண்களை சந்திக்க
மறுத்தே சொன்னார்..
அந்த வாலிபனை
பார்த்தேன்...
கேலிப் புன்னகை...
வெளியேறினேன்........
வெளியே காத்திருந்த
வேலையில்லா பட்டதாரிகளை
பார்க்க பரிதாபமாக
இருந்தது....
கட்டிடத்தைக் கடந்து
தூரத்தில் பெட்டிக்கடை
சென்று,,,
ஒரு பில்டர் தாங்க...
கடைகாரர் கொடுத்த
சிகரெட்டை புகைக்க
தொடங்கினேன்...
___________________*_____
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
தோழமைகளே...

எழுதியவர் : கவிஞன் அருள் (4-Aug-15, 8:35 pm)
பார்வை : 459

மேலே