இலட்சிய பயணம் நோக்கி______________________நிஷா
![](https://eluthu.com/images/loading.gif)
(என் இந்திய தேசத்து இராணுவ வீரர்களுக்கு இக்கவிச் சமர்ப்பணம்)
இமயத்தின் வாசலிலே
இமைக்காமல் காத்து நிற்கும் என்
இந்திய தேசத்து இளைஞனே
இரவோடு பகலாக நீ படும்
அயராத உழைப்பில் எமக்கு
அழகான தூக்கத்தை பரிசளித்தாய்....
உன் தாயோ மனைவியோ
தவிக்கின்ற குரலுக்கு
செவிசாய்ப்பதை விட்டு
தாய்மண்ணைநேசிக்கும் நீ
தனித்துவமிக்கவனே.... நீ
சுயநலம் தாண்டி சுவாசிப்பவனே .....
ஆசைகளின் ஓசைகளை அடக்கி
ஆருயிரை துச்சமாய் மதிக்கும் என்
அன்பு சகோதரனே ... உன்
தோட்டத்துப்பூக்களுக்கு
புன்னகையை பரிசளிக்க நீ சிந்தும்
உதிரம் என் கண்முன்னே தெரிகிறது....
சாதிக்க பிறந்தவன் நீ..
சரித்திரங்கள் உன் பெயரை
சகலோர்க்கும் சொல்ல வேண்டும்
இலட்சிய வெறி கொண்டவன் நீ
இலக்கினை நோக்கிய உன் பயணம்
இனிதே நிறைவேற வாழ்த்துகிறோம்....