மாமனிதரின் மறைவு
பாம்பனில் ஆரம்பித்த பயணம் இன்று முடிந்தது
வெற்றி வேட்கை கொண்டவருக்கு தடைகள் முற்றுக்கட்டைகள் அல்ல
முயற்சி இருந்ததால் அவரின் லட்சியம் திருவினையான்அது
இந்தியாவில் ஏவுக்அண்ஐ புரட்சி நடத்திய விஞ்ஞான்அ மனிதர்
பட்டி தொட்டிக்கும் இந்தியா ௨௦௨௦ கொள்கயை பரப்பியவர்.
மருத்துவ துறையிலும் மகத்தான்அ சேவையாற்றிய மாமனிதர்
திருக்குறளையும் .திருகுரான்ஐயும் கரைத்து குடித்தவர்
வீணை மீட்ட தெரிந்த இவர் நடமாடும் சரஸ்வதி தேவி
ஸ்ரீ ராகத்தின் அபிமானி
இந்திய முன்னேற்றத்துக்கு .இளைஞர்களை நம்பிய
இணைஇல்லா வழிகாட்டி
ஜனாதிபதி மாளிகையின் படோடபம் துறந்த ஜனங்களின் தலைவர்
கரைபடியாத கைகளும் வஞ்சகமில்லா சிரிப்பாலும் தெளிவான சிந்தனை ஆற்றல் ஆலும்
உலகை வியக்க வைத்தவர்
ஆசிய துணைக்கண்டத்தின் தீர்க்கதரசியே
இந்தியா ௨௦௨௦ சாத்தியமாகும் நாள்
இந்திய அக்னி சிறகுகள் வெற்றி தோகைகளாய் மாறி வானில் வந்து உமக்கு செய்தி சொல்லும்.