இரும்பு பைப்பால் அடித்த போலீஸ் ஜாமீனில் வெளிவர பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மறுப்பு
மது ஒழிப்பிற்க்கு போராட்டக் களத்தில் இன்னுயிர் நீர்த்த காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தை தொடர்ந்து ஆங்காங்கே அரசியல்வாதிகளும்,சமூக ஆர்வளர்களும் போராட களம் பூண்டமை நாம் அனைவரும் அறிவோம்.
மது ஒழிப்பிற்க்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் களிங்கப்பட்டியில் போராட்டத்தைத் துவங்கிய நிலையில் அதன் பின்னர் வைகோவும் அதில் இணைந்தார்
பதட்டமான சூழ்நிலை உருவாகி காவலர்களுக்கும் போராட்டக் காரர்களுக்குமிடையே களவரம் மூண்டது அநேக நபர்கள் காயப்படுத்தப்பட்டனர் காவலர்களால் தொடர்ந்து வைகோவை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளும் பாய்ந்தது திருமாவளவனும் அந்நிகழ்வில கலந்து கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தார் அதன் பின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்...
இந்நிலையில் 03.08.2015 ல் பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோறியும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் மாணவர்களும் போரட களம் பூண்டனர் அவர்களை காவர்கள் துளியும் மனிதாபிமானம் இன்றி கால்களால் எட்டி உதைத்தும்,இரும்பு கம்பிகளால் அடித்தும் கைது செய்து சிறையிலடைத்தது அதில் பதினைந்து மாணவர்களை புழல் சிறையில் அடைத்தது தமிழக சட்டத் துறை,
இந்நிலையில் சிறையில் உள்ள மாணவர் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் "தாங்கள் காவலில் இருந்த போது காவலர்கள் தங்களை மனித உரிமை மீறல் விதமாக அடித்து துண்பப்படுத்தினர்"நாங்கள் குற்றம் எதுவும் செய்துவிட்டு சிறைக்கு வரவில்லை அரசு இழைத்து வரும் குற்றத்தை தட்டிக்கேட்டதற்க்கு தண்டிக்கப்பட்டோம் எனவே எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எங்கள் மீது சட்ட விரோதமாக தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் பினையில் வெளிவர விரும்பவில்லை என கூறியுள்ளனர்...
மாணவர்களின் எதிர்காலம் கருதி வெளிவிட உதவுமா நீதிமன்றம்???
அந்த உத்தரவை மதிக்குமா தமிழக அரசு???