தங்கச் சிலையே தாவனி நிலவே

தங்கச் சிலையே தாவனி நிலவே
தரையினில் நடக்கும் சங்கத் தமிழே
பூக்களின் காடே புதையலின் தீவே
புதுக்கவிதைகள் பாடும் புன்னகை இதழே

என் காதல் தேச ராணி நீயடி
என் கவிதை தேசம் முழுதும் நீயடி
என்னை நீயும் பாராமல்
எட்டிச் செலவது ஏனடி
என்னை நீயும் சேராமல்
நான் ஜென்மம் கொண்டதே வீணடி

கைவீசி நடந்திடும் தேரா நீ
கவிதைகள் வாழ்ந்திடும் ஊரா நீ
காதல் காட்டில் தொலைந்த எனக்கு
வழிகள் காட்டிடும் டோரா நீ

பூமி வரும் தேவதைகள்
உனை சாமியென்றே பூஜிக்கும்
பூக்கள் கூட உன் இதழை
பூக்கச் சொல்லி யாசிக்கும்
மரங்களும் சுவாசிக்க உன் மூச்சுக் காற்றை யாசிக்கும்
வரங்களும் கைகள் நீட்டி உனை வரமாய் கேட்டே பூஜிக்கும்

கல்லரை உறங்கிடும் கம்பனும்
கவிதைப் பாட கண் விழிப்பான்
காதில் உன் பெயரைக் கேட்டால்..
காளைகள் அடக்கிடும் கொம்பனும்
உன் காலில் சேவை செய்வான்
நீயும் கண் ஜாடை செய்தால்...

போதனை மறந்து
புதுக் கவிதைப் பாடுவான்
உன்னைக் கண்ட புத்தனும்...
வேதனை தந்திடும் காதல் நோய்க்கெலாம்
மருந்தை உன் கண்ணில் தேடுவான் சித்தனும்...

வள்ளுவன் மறந்திட்ட குறள்களும்
நான் வந்து சொல்லவா உன்னிடம்..
வஞ்சி உன்னைப் பாடவே
வார்த்தை இல்லை என்னிடம்...

முச்சங்கம் வளர்த்த தமிழெலாம்
உன் மொழியில் தினமும் பொழியுதே..
உன் அங்கம் கொண்ட அழகெலாம்
எனை மூர்ச்சையாக்கி கொல்லுதே..
என் கவிதை கொண்ட பொருளையெல்லாம்
உன் ஒற்றை சொற்கள் வெல்லுதே..

எழுதியவர் : மணி அமரன் (10-Aug-15, 10:39 pm)
பார்வை : 313

மேலே