சித்திரமாய் யுவதி யொருவள்

* குழந்தை யென வீணை
** மடி மீது தவழ
*** சித்திரமாய் யுவதி யொருவள்
**** இசைத்துக் கொண்டிருகிறாள்
***** சமுத்திர மணற் துகள்களில்
****** பகலை ஆண்டிட்ட
******* ஆதவனும்
******** புலம்பி அலையும்
********* மேகக் கற்றைகளில்
********** மயங்கிக் கொண்டிருகிறான்
*********** அவள் வீணையின் நாடிகளை
************ விரல்களால் மீட்டிடும்
************* மாலை கணத்தில்
************** எச்சமிடும் காக்கைகளும்
*************** மிச்சமில்லாமல் வந்துக் கொண்டிருகின்றன
**************** சொச்சமில்லாமல் இவளின் வனப்பை காணிட….

பாரதி. செ

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (11-Aug-15, 2:37 pm)
பார்வை : 247

மேலே