துண்டுகள்

மரம் இருக்கிறது
என் பின்னாலுள்ளவன் இருக்கிறான்
பேருந்தும் நகர்ந்து மறைகிறது
விளக்குகள் இருக்கின்றன
வானம் துண்டாகி அகப்பட்டிருக்கிறது
சிலர் தெரிவதும் விலகுவதுமாய்
நானுமிருக்கிறேன்
எதுவுமே தெளிவாய் இல்லை
கதவு மூடப்பட்டது...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (11-Aug-15, 7:29 pm)
Tanglish : thundugal
பார்வை : 82

மேலே