கண்ணாமூச்சி
இது என் தாய்மொழிதான்
இத்தனை வருடங்களாய்
பயன்படுத்திய வார்த்தைகள் தான்
வார்த்தைகளை கோர்த்து
கவி படைக்கவும்
கற்று கொண்டவன் தான்...
ஆனால் ஏனோ
உன் சூசகமான
வார்த்தைகள் மட்டும்
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெளிவில்லாமலும்
என்னை குழப்பிகொண்டிருக்கிறது
நீ நடத்தும்
காதல் கண்ணாமூச்சியில்...