வரதட்சணை

கோடி கோடியாய்
அன்பு கொட்டிக்கொடுத்து
வளர்த்த மகளை ..
லட்ச லட்சமாய்
செல்வம் கொட்டிக்கேட்டு
அழைக்கிறார்கள்..
விலை கொடுத்துப்பொருள்
வாங்கும் காலம் மாறிவிட்டது
இந்த திருமணச்சந்தையில் மட்டும்..
ஆம்..
இங்கு மட்டுமே
வாழத்தயாராய் இருக்கும் பொருள்
தன்னை வாங்குவோருக்கு
விலை கொடுக்க வேண்டும்..

எழுதியவர் : deeku (13-Aug-15, 4:01 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 161

மேலே