எதிர்காலத்தை நேசிக்கிறேன்

நாள்குறிப்பின் பக்கங்கள் கழிகின்றன.
நாளும் உன் நினைவுகள் நீள்கின்றன.

இன்பம் சேர்த்த இறந்தகால நினைவுகள்
நிகழ்காலத்தின் சுவடுகளாய் மாறி
எதிர்காலத்தை நேசிக்க வைக்கின்றன!

தொலைந்துவிட்ட என் நினைவுகளும்
தொடர்ந்து வரும் உன் நினைவுகளும்

வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்க
தேய்பிறை நிலவாய் தேய்கிறேன் நான்!
இருந்தும் எதிர்காலத்தை நேசிக்கிறேன்!

என் கவிதைகளை கோடிட்டே எழுதுகிறேன்
உன் கன்னக்குழியால் நிரப்புவாய் என!
எழுத்துக்களை விடவும் கோடுகளால்
என் கவிதை புத்தகம் நிரம்பி கிடக்குது!

விழித்திருந்தே கனவுகள் காண்கிறேன் உன்
வருகையை அறியாமல் போய்விடுவேனோ என
விடியும்வரை உறக்கமின்றி உன்
வருகையும் இன்றி தோய்கிறேன்!

காத்திருக்கிறேன் உனக்காக
கனவுகளை சுமந்த இரவோடு
காதலை சுமந்த இதயத்தோடு
நீ வருவாய் என, நிம்மதி தருவாய் என
எதிர்காலத்தை நேசிக்கிறேன்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (13-Aug-15, 2:49 pm)
பார்வை : 138

மேலே