கௌசல்யா -தொடர் 7

கௌசல்யா :நான் ஏன் தந்தை அருகே சென்று பார்த்தேன் .எந்தவித சஞ்சலமுமின்றி அமைதியாக
இருந்தார் .கையை பிடித்தேன் .குளிராக இருந்தது . நான் வெளியே வந்து விட்டேன் .

சிறு வினாடிகளில் உள்ளே இருந்து அழுகை சத்தம் கேட்டது .ஆம் ஏன் தந்தை இறந்து விட்டார் .
மனது மரத்து போனது வாழ்வில் தொடர் இன்னல்களை அனுபவித்து சகித்து கொள்ள ஆரம்பித்து
விட்டேன் .

இருளிலே நாட்கள் கழிந்தது .என் கணவருக்கும் வேலை சரியல்லை .என்ன செய்வது என்றே
தெரியவில்லை .
என்னுடைய மகனும் வீட்டிலேயே இருந்தான் .அவனை கூப்பிட்டு நீ பள்ளிக்கூடம் போடா !
என்று சொன்னேன் .

ஒரு நாள் என் கணவர் வேலை செய்து கொண்டிருந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு அதில்
பலர் காயமடைந்தனர் .என் கணவரும் .ஆலை பராமரிப்பு சரியில்லை என்று மூடப்பட்டது .

என்ன செய்வதென்று இருந்தோம் .அப்போது ஒருவர் எங்களுக்கு உதவினார்.
அவரது வீட்டில் வீளை போட்டு தந்தார் .மேலும் என் மகனது படிப்புக்கு பெரிதும் உதவினார் .
என் கணவரை ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார் .
சிகிச்சைக்காகன செலவு அவரே எட்ட்று கொண்டார் .இன்று குணமாகி அவரது அலுவலகத்தில்
எழுத்தராக பணிபுரிகிறார் .

என்மகனும் தொடர்ந்து நல்ல முறையில் படிக்கிறான் .ஏதோ என்னோட கஷ்ட காலங்கள் முடிந்தது
வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது .
இன்று காலை சரியாக சாப்பிடவில்லை . அதான் மயங்கிவிட்டேன் .உதவிக்கு நன்றி ..
நான் வருகிறேன் ....

குமார் :கௌசல்யா நில்லு .....

உன்னோட வாழ்கையில நீ பட்ட கஷ்டத்துக்கு நான் ஒரு மிகப்பெரிய காரணம் ஆகிவிட்டேன் .
என்னை மன்னித்து விடு . என்னால் கருவுற்றதாய் சொன்னே ..அப்படீனா ! உன்னோட மகன்
நமக்கு பிறந்தவன்தானே .....ஆம்

அவனை நான் பார்க்கணும் என் மகனை நான் பார்க்கணும் .என் மனம் துடிக்கிறது கௌசல்யா
என் மகன் எங்கே இருக்கிறான் ..

கௌசல்யா : பாவத்தின் பிணைப்பில் பாசம் வருகிறது .

குமார் : என்னை வார்த்தைகளால் கொள்ளாதே ! உன்னை நான் வெறுக்கவில்லை ...மறக்கவில்லை
விதியின் பிடியில் மாட்டி உன்னையும் நம் குழந்தையையும் பிரிந்துவிட்டேன் .
என்னை மன்னித்து ..என் மகனை நான் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் .
(தொடரும் )....

எழுதியவர் : சு .முத்து ராஜ குமார் (13-Aug-15, 4:31 pm)
பார்வை : 142

மேலே