என்ன ஒரு முரண்பாடு

வேறொருவன் கட்டிய தாலி
உன் மார்பில் உரிமையாக புரள
நீ கோவிலில் நிற்கிறாய் ....!!

"வா போகலாம்" என்கிறாள் என் அம்மா ....
"ம் போகலாம்" என்கிறான் உன் கணவன் ...

உன்னை மறக்காமல் நானும் ...
என்னை மறந்த நீயும்....
நம்மை மறந்த நம் காதலும்.....

என்ன ஒரு முரண்பாடு .....

எழுதியவர் : பிரவின் ஷீஜா (13-Aug-15, 4:58 pm)
பார்வை : 163

மேலே