விடியலைப் பயிரிட

ஒருநாள்
பூமி உருண்டையின்
கிழக்கு விளிம்பில்
ஒரு சித்திரக்காரன் வந்தான்
ஒரு புதிய சரித்திர மாற்றத்துக்கான
சித்திரங்கள் கொண்டுவந்தான்

அவர்கள் கேட்டனர்:
அழகான வர்ணங்கள்
இவை என்ன விலை ?

சித்திரக்காரன் சொன்னான்:
இவை விற்பனைக்கல்ல
விதைக்கவே.!
சித்திரங்களைப் பார்த்துச்
செல்லுங்கள்
சரித்திரங்களாகப் பூத்துச்
செல்லுங்கள் ..!

***

மீண்டும் ஒருநாள்
பூமி உருண்டையின்
கிழக்கு விளிம்பில்
ஒரு விடியலின் பாடகன் வந்தான்
சில வைகறைப் பாடல்கள்
கொண்டு வந்தான் .

அவர்கள் கேட்டனர் :
அழகான பாடல்கள்
இவை என்ன விலை ?

பாடகன் சொன்னான்:
இவை விற்பனைக்கல்ல
வைகறையை
அறிமுகம் செய்யவே ..!
பாடல்களைக்
கிழித்துச் செல்லுங்கள்
வைகறையை மட்டும்
எடுத்துச் செல்லுங்கள் (1995)

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-Aug-15, 6:33 pm)
பார்வை : 121

மேலே