கை கொடுத்து தூக்கியது
சிறுவயதில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினார்
அம்மா ....!!!
பள்ளி பருவத்தில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!
பருவ வயதில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினான்
உயிர் நண்பன் ....!!!
முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது
முதியோர் இல்லம் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்