கண்மணி அன்போடு காதலன்
காத்திருக்க வேண்டுமென்று
சொன்னக் காதலி, எனை
பார்த்துச் சொன்னப் பெண்டு அவ
வண்டு மாதிரி ! - அவள்
எண்ணமெல்லாம் என்னைச் சுற்றி
எழிலாய் பறக்குது
ஓடி நானும் பார்க்க வந்தாள்! ... புள்ள
ஒலிந்து மறையுது !
சட்டைப் பையில் பத்து ரூபா
பார்த்து வைத்தவள்,...
சந்துக்குள்ள வந்து நின்று
சொந்தம் சொன்னவள் !
வந்திருக்கேன் தேசம் விட்டு
வந்துச் சேரடி
சொந்தக்காரி சொன்னச் சொல்லை
எண்ணிப் பாரடி
காய்ந்துப் போன வல்லிக் கொடிக்
கண்ணே நானடி
மாய்ந்துப் போகும் முன்னே(னர்) என்னை
மண்ணில் சேரடி
காளி கோட்டம் விட்டு உன்னைக்
காண வந்தவன்
காதலைத்தான் காதுக்குள்ளே
கவியாய்ச் சொன்னவன்
உன்னவன்(என்று)னு எனை நினைத்தாள்
உண்மைச் சொல்லடி
எவனிவன்னு(என்று)எனை நினைத்தாள்
எரித்தேக் கொல்லடி.