என்னவன் வருவானா -முஹம்மத் ஸர்பான்
என் கிருஷ்ணனே! மனதினில் புல்லாங்குழல்
வாசிக்கிறாய்.விழி நீரில் நினைவலை அரங்கேற...,
என் மேல் காதல் வைத்து காத்திருந்தாய்.இன்று வரை...,
நான் உன்னை வெறுத்து நோக வெச்சனே!!! நீ
சென்று விட்டாய் நான் உனக்காக காத்திருக்கிறேன்.
என் மனத்திருடன் காண வருவான் என்று....,
அவனுக்கு பிடித்த அலங்காரம் வைத்து
நித்தம் நித்தம் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரவில் கண்ணாளன் என்னை பார்த்த பார்வைகள்
கண்ணாம் பூச்சி மூட்டிட..,என் கண்கள் இன்பக்
கண்ணீரை அனுபவிக்கிறது அவன் பிரிவினில்.....,
இனிமேல் அவனை பிரிந்து என்னால் இருக்க முடியாது
கருமேகங்களில் நீராடும் வெண்ணிலவே......!!!
மீண்டும் என்னவன் காண வருவானா...............?