இன்பமெங்கும் பொங்கட்டும்

நாளைய பொழுதே,
நீ வருவதைத் தள்ளிப் போடு!
தாமதம் ஆனாலும் பரவாயில்லை;
விடுதலை விடியலை எம் மக்கட்கு
தவறாமல் வந்து நீ அள்ளிப் போடு!!

சத்தமிட்டு விளையாடும் எம் சந்தான செல்வங்கள்
பத்திரமாய் வீடு வந்து பசியினை ஆற்றிடட்டும்.!!!

வாலைக் குமரிகளின் வால் பிடித்து நடந்திடும்
காளையர் காதல் அதன் புனிதத்தை உணரட்டும்!!!!

பத்தினிப் பெண்டிரெலாம் பால் பழம் சகிதமோடு
அத்தானின் மடிபடுத்து அடுத்த கதை பேசட்டும்!!!!!

வான் பார்த்த பூமியிதும் அதில் நிற்கும் பயிர்களும்
தான் குளிர்ந்து தழைத்திடவே தங்கமழை பொழியட்டும்!!!!!!

மதுபானக் கடையிலேலாம் 'இன்றுதான் கடைசி ' எனும்
மதுரத் தமிழ் அறிவிப்பு மூடுதிரையாய் தொங்கட்டும்!!!!!!!

பொல்லாப்பு தீங்குகளும் பொறாமைச் சண்டைகளும்
எல்லோர்க்கும் நீங்கிடவே இன்பமெங்கும் பொங்கட்டும்!!!!!!!!.

நாளைய பொழுதே,
நீ வருவதைத் தள்ளிப் போடு!
தாமதம் ஆனாலும் பரவாயில்லை,
விடுதலை விடியலை எம் மக்கட்கு
தவறாமல் வந்து நீ அள்ளிப் போடு!!

அனைவர்க்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள் .
.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (14-Aug-15, 2:16 pm)
பார்வை : 70

மேலே